கிராம நிர்வாக அலுவலகத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலக வளாகத்தில் இன்று டிசம்பர் 23 ந்தேதி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
இதில் செந்துறை வட்டாச்சியர் பாக்கியம் விக்டோரியா , சமூக நலதுறை தாசில்தார் ராஜமூர்த்தி ஆகியோர்கள் பொதுமக்களிடம் பட்டா சிட்டா மாறுதல் , குடும்ப அட்டையில் பெயர்கள் சேர்த்தல் நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் , நில அளவை , முதியோர் உதவிதொகை சம்பந்தமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்று பரிசீலனை மேற்கொண்டனர்.
இம்முகாமில் மண்டல துணை வட்டாச்சியர் ராமலிங்கம் , செந்துறை முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்கடம்பன் , வருவாய் ஆய்வாளர் சத்யா , கிராம நிர்வாக அலுவலர் ( பொ ) சதீஷ் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.