குழுமூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தல்- நள்ளிரவில் துணிந்து லாரியை சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ரைஸ்மில் அருகே லாரி ஒன்று நேற்று நள்ளிரவு நவம்பர் 29 ந்தேதி நின்று கொண்டிருப்பதையும் அதில் மூட்டைகள் ஏற்றப்படுவதையும் கண்டு சந்தேகமடைந்த கிராம இளைஞர்கள் இருவர் அருகில் சென்று பார்த்த போது அவை ரேஷன்அரிசியை மாவாக்கி வெளி மாவட்டத்திற்கு செல்வதை கண்டறிந்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
இடைப்பட்ட நேரத்தில் ரைஸ்மில் உரிமையாளர் மணிகண்டன் மற்றும் லாரி ஓட்டுனர் சேலம் மாவட்டம் லிங்கவெளி குமார் ஆகியோர்கள் லாரியை அங்கிருந்து எடுக்க முயற்சி செய்த போதும் துணிச்சலாக இளைஞர்கள் இருவரும் அதிகாரிகள் வரும் வரை தடுத்து நிறுத்தி ஒப்படைத்தனர்.
அதிகாரிகள்ஆய்வில் ரேஷன் அரிசி மூட்டைகள் மாவாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டந்தையடுத்து மணிகண்டன் மற்றும் குமார் ஆகிய இருவர் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மீதும் வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணைக்கு அரியலூர் கொண்டு சென்றனர்.நள்ளிரவு நடைப்பெற்ற இச்சம்பவத்தில் துணிந்து செயல்பட்ட இளைஞர்களுக்கு பொதுமக்களிடையே பாராட்டு மழை குவிந்து வருகிறது.