கேரளத்திற்கு உதவிய மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள்
கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளமாநிலத்திற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புக்கள் உதவிவருகின்றன அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அருகே செயல்படும் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரள மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 50000/- மதிப்புள்ள
வேட்டிகள் புடவைகள் துண்டுகள் போர்வைகள் சுடிதார் நைட்டிகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் உடையார்பாளையம் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் கேரளா சென்றடையும்