கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்த சிறுவனுக்கு திருமானூரில் மவுன அஞ்சலி ஊர்வலம்
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் சூர்யா(9) தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். உயிர் இழந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தம் விதமாக
கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது திருமானூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முக்கியவீதிகளின் வழியாக சென்று, சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இடுகாட்டுக்கு சென்று கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.