mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட எதிர்ப்பு திருமானூரில் தீர்மானம்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட எதிர்ப்பு திருமானூரில் தீர்மானம்

திருமானூரில் நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கொ ள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு


அரியலூர் மாவட்டம் திருமானூரில் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்துக்கட்சி சார்பில் ஒன்றிய அளவில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், கல்லணை முதல் கீழனை (அணைக்கரை) வரை கொள்ளிடம் ஆற்றில் 10-ம் மேற்பட்ட இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்பட்டு திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், தஞசாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், ஆற்றின் ஓரங்களில் உள்ள விவசாய நிலங்கள் கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே அருகில் போர்வெல் அமைத்து விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றில் ஆங்காங்கே மணல் குவாரி அமைத்து அதிகப்படியான ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு விட்டது.

இதனால், கொள்ளிடம் ஆற்றில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும், வருடம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த கொள்ளிடம் தற்போது ஆண்டுக்கு 3,4 மாதங்கள் மட்டுமே தண்ணீர் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

எனவே, தற்போது கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இதற்காக வரும் 7-ம் தேதி கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களில் கருப்புகொடி ஏற்றி திருமானூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்துகட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏ ப.இளவழகன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட துணைச் செயலாளர் தனபால், தமாக மாவட்ட தலைவர் நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்மைப்பு மாநில தலைவர் இளங்கீரன், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் நடராஜன், காங்கிரஸ் மாவட்ட மகளிரணி தலைவி மாரியம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன், மேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் தங்க ஜெயபாலன், பாமக மாவட்ட தலைவர் ரவிசங்கர், அனைத்து மக்கள் கட்சி தலைவர் அம்பேத்கர் வழியன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.   செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *