கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய இருவர் கைது லாரிகள், மற்றும் பொக்லைன் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் செம்பியக்குடி பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, செம்பியகுடி சுடுகாட்டு பாதையில் லாரிகளில் பொக்லைன் கொண்டு மணல் அள்ளப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸார், மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் குமார் கோனேரிபானையம் சின்னதம்பி ஆகியோரை கைது செய்தனர்.மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய பொக்லைன் டிரைவரை தேடிவருகின்றனர். தினமும் லாரிகளில் மணல் திருடப்பட்டு கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.