சங்கடத்தில் சம்பா சாகுபடி கண்
கலங்கும் அரியலூர் டெல்டா விவசாயிகள்
அரியலூர் மாவட்ட கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருமானூர் டி.பழூர் ஒன்றியபகுதிகள் டெல்டா பாசனம் என அழைக்கப்படுகிறது இதில் தற்போது சம்பா சாகுபடிக்காக பயிரிடபட்ட நெல்லுக்கு போதிய தண்ணீர் இல்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க அரியலூர் மாவட்ட தலைவர் மணியன் ஆகிய இருவரும் கூறியுள்ளது
கடந்த ஆண்டு 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி காரணமாக டெல்டா பகுதியான டி.பழூர் மற்றும் திருமானூர் பகுதிகளில் கடந்த ஆண்டு விவசாயம் பொய்த்துப் போனது. இந்த ஆண்டு மழை பெய்தும் புள்ளம்பாடி பாசன வாய்க்கால் மூலம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் தாமதமாக அக்டோபர் 2 ஆம் தேதி திறக்கப்பட்டதால் பட்டம் தவறி விவசாயப் பணிகளை விவசாயிகள் தாமதாமாக மேற்கொண்டு வந்தனர்.
தற்போதைய மேட்டூர் அணை நீர்மட்டம் 56 அடிக்கும் கீழே வந்ததால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சூழல் உள்ளது. நேற்றைய தினம் கர்நாடக அரசு முதல்வர் சித்தராமையா தண்ணீர் திறந்து விட முடியாது என கைவிரிக்க உச்சநீதிமன்றமோ இன்னும் 4 வாரத்தில் காவிரி பிரச்சினை குறித்து தீர்ப்பு வெளியிட உள்ளது.
தற்போது சம்பா நெற்பயிர் சூல் பிடிக்க உள்ள நிலையில் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் போர்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் கடந்த ஆண்டை போல
இதே நிலை நீடித்தால் விவசாயிகள் கடன் சுமையால் தவறான முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகலாம் இந்நிலை தொடராதிருக்க தமிழக அரசு காவிரி நீரை பெற்று தர கேட்டுக்கொள்கிறோம் மேலும்
திருமானூர் மற்றும் டி.பழூர் டெல்டா பகுதிகளில் மழைநீர் வீணாய் பல நூறு டி.எம்.சி தண்ணீர் கடலில் சென்று வீணாய் கலக்கிறது. மழைநீரை சேமிக்க கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டி தரவேண்டுமென்ற நீண்டகால கோரிக்கையை உடனே செயல்படுத்த வேண்டும்
புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தில் மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாக இருக்க கூடிய கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரிக்கு மருதையாற்றின் குறுக்கே அணை கட்டி உபரியாக வரும் மழைநீரை சேமித்தால் நாங்கள் மேட்டூர் அணை நீர் வராத போது இதனைக் கொண்டு 20 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இயலும். மேலும் 10 ஆயிரம் ஏக்கர் போர்வெல் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளும் பயன்பெறுவர்.
குறித்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், நீர் வரத்துகளை தூர்வாரி இருந்தால் தற்போது பெய்த மழைநீரை கொண்டு மேலும் ஒரு மாத காலம் விவசாயம் செய்து இருக்க முடியும். தாமதபோக்கை கைவிட்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் சம்பா சாகுபடி உழவனையும், அவர்கள் குடும்பத்தையும் கடன் சுமையில் ஆழ்த்திவிடும்
என கூறியுள்ளனர்.