சன்னாவூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது காளைகள் முட்டியதில் 12 வீரர்கள் காயம்
திருமானூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 12 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சன்னாவூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம்,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300 காளைகள் பங்கேற்றன. மாடுகளை அடக்க 150 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் கோயில் காளையும், தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, வாடிவாசலிலிருந்து சீறிவந்த காளைகளை அடக்க முயன்ற விளாகம் மரியதாஸ்(26), லால்குடி நந்தகுமார்(22), பிள்ளையார்பட்டி பாலாஜி(30), ஏலாக்குறிச்சி அருள்குமார்(26) உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
இதில், படுகாயமடைந்த கல்லகம் சுபாஷ்(23), மலத்தாங்குளம் ஜெனித்(23) ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழாவில், மாடுபடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.
One comment
Pingback: mushroom shop Portland