சப் ஜூனியர் மாநில பூப்பந்தாட்ட போட்டிக்கு அரியலூர் மாவட்ட அணித் தேர்வு, நடைபெறுகிறது.
இது குறித்து அரியலூர் மாவட்ட பூந்தாட்ட கழக செயலர் த.மணிவண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 38 -வது சப் ஜூனியர் மாநில பூப்பந்தாட்ட பட்டய போட்டி கடலூர் மாவட்டம் வைரங்குப்பம் அருகேயுள்ள ஸ்ரீ மகாலட்சுமி தொழில்நுட்ப கல்லூரியில் செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் அரியலூர் மாவட்டத்தின் சார்பில் விளையாட விரும்பும் வீரர்,வீராங்கனைகள் தேர்வு ஆகஸ்ட் 5-ம் தேதி காலை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்,வீராங்கனைகள், பள்ளியின் சார்பாகவோ, குழுக்களாகவோ அல்லது தனி நபராகவோ கலந்துகொள்ளலாம். 1.01.2003 தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்கவேண்டும். என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது