mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சமையல் ஈஸி

சமையல் ஈஸி

சமையல் ஈஸி : தேங்காய் பால் பிரியாணி தேவையான பொருட்கள்:

1 நெய் அல்லது ஆயில்
2பட்டை கிராம்பு ஏலம்
3 சோம்பு 1டேபிள் ஸ்பூன்
4 சீரகம் பொடி 1 டேபிள் ஸ்பூன்
5பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
6 முந்திரி தேவைக்கேற்ப.
7 பச்சை மிளகாய் 4 கீறியது
8 கறிவேப்பிலை,புதினா,கொத்தமல்லி தழை தேவைக்கு
9 எலுமிச்சை பழம் சிறிது 1
10அரிசி 3 டம்ளர்
11 உப்பு தேவைக்கேற்ப
12 தேங்காய் பால் 3 டம்ளர்
13 தண்ணீர் 3 டம்ளர்

செய்முறை முதலில் அடுப்பை பற்ற வைத்து குக்கரை ஏற்றி நெய் அல்லது ஆயில் தேவைக்கேற்ப விடவும் பட்டை கிராம்பு ஏலக்காயை போடவும்,பிறகு வெங்காயம் போட்டு நன்றாக வதங்கவிடவும் பிறகு முந்திரி பருப்பு இட்டு சிறிது நேரம் கழித்து பூண்டு பேஸ்ட் இரண்டு டீஸ்பூன் போடவும்,பிறகு மிளாகாய் கீறி போடவும் மல்லி புதினா கறிவேப்பிலை போடவும் தேங்காய் பாலும் தண்ணீரும் கலந்து 6 டம்ளர் ஊற்றி கொதிநிலை வந்த பிறகு சிறிது எலுமிச்சை சாறும் தேவைக்கேற்ப உப்பும் இட்டு ஊறவைத்த அரிசியை போட்டு மூடிவிடவும். மிதமான சூட்டில் இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு பிறகு சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் கம கம தேங்காய்பால் பிரியாணி ரெடி இதை சாப்பிட அடம்பிடிக்கும் குழதைகள் விரும்பி உண்பார்கள் ஒரு முறை சமைத்து பாருங்களேன்.

திருமதி : சுசி ஷாம்
அரியலூர்.

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *