mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சிமெண்ட் ஆலை வாகன பயன்பாட்டுக்கு தனிசாலை விபத்துகளை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை தேவை திமுக தீர்மானம்

சிமெண்ட் ஆலை வாகன பயன்பாட்டுக்கு தனிசாலை விபத்துகளை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை தேவை திமுக தீர்மானம்

சிமெண்ட் ஆலைகள் வாகனம் செல்ல தனி சாலை, விபத்துக்களை தடுக்க அரசு நடவடிக்கை தேவை திமுக தீர்மானம்
அரியலூர் மாவட்ட திமுக செயற்க்குழு கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் தங்க.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது இதில்
மாவட்ட செயலாளரும் முன்னாள் எம் எல் ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.

பின்னர் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் வரும் நவம்பர் 8 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்படும் தொடர் சாலை விபத்துக்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் கனரக வாகனங்கள் செல்லும் அனைத்து சாலைகளையும் அகல படுத்தி, நடுவில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கங்களிலிருந்து சிமென்ட் ஆலைகளுக்கு தனி சாலைகள் அமைக்க வேண்டும்.

லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்த வேண்டும். சுண்ணாம்புக்கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் முறையாக தார்ப்பாய் கொண்டு மூடிச் செல்ல வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சுபா சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர்கள் நா.தனபால், கணேசன், லதாபாலு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ். தேவையான பொருட்கள் 1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *