mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சிமென்ட் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கோரிக்கை

சிமென்ட் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கோரிக்கை

சிமென்ட் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கோரிக்கை

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமென்ட் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு,மக்கள் நல வாழ்வு இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான நல வாழ்வுச் சேவைகளின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு இளங் குழந்தைப் பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் க.சண்முகவேலாயுதம் தலைமை வகித்தார்.தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு இயக்க அமைப்பாளர் ஏ.அமீர்கான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட வள மையத்தின் தன்னார்வ குழு அமைப்பாளர் ஜெ.முகமது உசைன்,அரியலூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.முன்னதாக ரோஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜான் கே.திருநாவுக்கரசு வரவேற்றார்

கூட்டதில்,மாவட்டத்தில் கழிப்பிட வசதி பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பெண்களுக்கு அதிகாரமளித்தல்,ஊட்டச்சத்து மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட செயல்திட்டத்தை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தொலைத்தூரப் பகுதிகளில் இருப்பதால் நடமாடும் நலவாழ்வு சேவையை ஏற்படுத்திட வேண்டும்.நலவாழ்வு சேவைகளை கண்காணிப்பதற்காக முழு அதிகாரம் கொண்ட கிராம நலவாழ்வு,நீர்,துப்புரவு மற்றும் ஊட்டச்சத்துக் குழுவை சீர்படுத்தி பலப்படுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் நலவாழ்வு சங்கத்தைப் பலப்படுத்தி முறையாக செயல்படுத்திட வேண்டும்.தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள்,காலாவதியான மருந்துகள்,போலியான மருந்துகள் மற்றும் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் நின்று புகைப்பிடிப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளங்குழந்தைகளின் உரிமை பேணும் நிறுவனத்தின் நிறுவனர் குறளரசன் நன்றி தெரிவித்தார்

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *