சிறுகளத்தூரில் கைத்தறி கூட்டுறவு சங்க தேர்தலை நியாமாக நடத்த அனைத்து கட்சி சார்பில் ஆர்பாட்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கத்திற்கு தேர்தல் நடத்த 26-32018அன்று வேட்புமனு தேர்தல் அலுவலர் பாலசுந்தரம் என்பவரால் பெறப்பட்டது.
21 பேர் இந்த சொசைட்டி இயக்குனர் போட்டிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி பெயர்ப்பட்டியலை ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பூட்டுபோடும் போராட்டம் காத்திருப்பு போராட்டம் என முன்பு நடத்தப்பட்டது இதை தொடர்ந்து இன்று 31/3/18. அன்று காலை கூட்டுறவு தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனக்கூறி
அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ். எஸ். சிவசங்கர் முன்னிலையிலும் , ஊராட்சி கழக செயலாளர் துரை. தேன்துளி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திமுக ஒன்றியச் செயலாளர்(வ). மு. ஞானமூர்த்தி , மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிவ. பாஸ்கர், மணபத்தூர் ஊராட்சிகழக செயலாளர் ஜெயராமன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மா. சிவப்பிரகாசம் , மு. சபாபதி, வி. எழில்மாரன், காளமேகம் அம்மா ம மு க (தினகரன்)ஒன்றிய செயலாளர் செந்தில், ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினர் மு. சபாபதி ஒ. இ. அணி அமைப்பாளர் தமிழ்மாறன் உள்ளிட்டவர்களும் நெசவாளர்களும் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.