செந்துறை அருகேயுள்ள சிறுகளத்தூர் கைத்தறி நெசவாளர் சொசைட்டிக்கு திமுக உள்ளிட்டவர்கள் பூட்டு போட்டனர்.
சிறுகளத்தூரில் செயல்படும் பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கத்திற்கு தேர்தல் நடத்த கடந்த 26-32018அன்று தேர்தல் அலுவலர் பாலசுந்தரம் என்பவரால். வேட்புமனு பெறப்பட்டது.
சொசைட்டியில் உறுப்பினராக இருப்பவர்களில் இயக்குனர் பொறுப்புக்கு 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர் மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பெயர்ப்பட்டியலை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறி
திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் இதர சங்க உறுப்பினர்களும் மாற்று கட்சியினரும் சொசைட்டி இயங்கும் கட்டிடத்திற்க்கு பூட்டு போட்டதோடு ஆளும் கட்சியை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு. வேட்புமனு தாக்கல் செய்த 21 பேர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் நடத்த கோரிக்கை வைத்தனர்.அத்தோடு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதே பிரச்சனைக்காக வரும் சனிகிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாகவும் அறிவித்துள்ளனர் 




