mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / சிலம்பம் சுற்ற நான் ரெடி… கற்றுக்கொள்ள யார் ?

சிலம்பம் சுற்ற நான் ரெடி… கற்றுக்கொள்ள யார் ?

சிலம்பம் சுற்ற நான் ரெடி… கற்றுக்கொள்ள யார் ? ரெடி என கேட்கிறார். 58 வயதான பெரியார் தொண்டரும் சிலம்பகலை ஆசிரியருமான பெரம்பலூர் மாவட்டம் வரகூர் ராஜேந்திரன்.

கருப்புசட்டை வெளுத்த வெள்ளை வேஷ்டி கழுத்தில்துண்டு என முழுமையான கிராமத்து மனிதரான அவர் 1985 காலகட்டத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட பெரியார் தொண்டர்களுக்கும் சிலம்பம் கற்க ஆர்வமுடைய இளைஞர்களுக்கும் ரியல்ஹீரோ குருநாதர்.

 

 சென்னை உணவகத்தில் 1970 முதல் காய்கறி நறுக்கும் வேலைப்பார்த்துக்கொண்டே குச்சிவிளையாட்டில் உள்ள ஆர்வத்தில் சென்னை சிலம்பகலை ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றதோடு ஜிம்னாஸ்டிக், பாக்ஸிங்கிலும் கற்று தேர்ந்தவர்.

ஓய்வு நேரத்தில் ஹோட்டல் மாடியில் நின்று கம்பு சுத்துவதை பார்த்த கலைஞரின் உறவினர் சொர்ணம். வரகூர் ராஜேந்திரனை விஜயகாந்த் நடித்த ஏழைசாதி படத்தில் குரூப் பைட்டராக அறிமுகப்படுத்தினார்.

நடிப்பில் நாட்டம் இல்லாததால் சொந்த ஊருக்கு வந்தவர் சிலம்பத்தின் அருமையை சொல்லித்தர ஆரம்பித்தார்.

 

1985 முதல் 95 வரை பத்தாண்டுகள் நல்லபடியாக சென்று கொண்டிருந்த சிலம்ப பயிற்சி நாளடைவில் குறைய பொருளாதார சூழலுக்காக தற்போது கட்டிட வேலைக்கு செல்லுவதும் வேலையில்லா நாளில் ஆடு மேய்ப்பதும் என காலத்தை கடத்துகிறார்.

அய்யா ஆசைன்னு ஏதாவது இருக்கா? என்றோம்.

 

 

தம்பி ஆதி மனிதனின் முதல் போர் ஆயுதமே குச்சி கோலுதான் அதில் உருவான அற்புதமான தற்காப்பு கலைதான் சிலம்பம் இதை கத்துகிட்டா இன்றைய இளைஞர்கள் மதுபோதை உள்ளிட்ட தீயபழக்கத்துக்கு அடிமையாக மாட்டாங்க. அதை பசங்க விரும்புவதில்லை என்பது தான் ஏதார்த்தமான உண்மை. அது போல் பெண் பிள்ளைகள் கற்றுக்கொண்டால் மன உறுதி ஆபத்து காலத்தில் தற்காப்பு இதில் விஷயம் உண்டு இன்றைக்கும் இந்த பயிற்சியை கற்றுத்தர நான் தயாராத்தான் இருக்கேன். ஆனால் கற்றுக்கொள்ள யார் இருக்கா ? என தனது ஆதங்கத்தை மடை திறந்த வெள்ளமாய் கொட்டி தீர்த்தார்.

சிலம்ப தற்காப்பு கலையில் துசும்பல் எனப்படும் ரவுண்டு கட்டி அடிக்கும் ராஜேந்திரன் தம்பி ஒரு தடவை இதை பாருங்களேன் என கம்பெடுத்து சுற்றி காட்டியது கண்கொள்ளா காட்சியாக விரிந்தோடுகிறது.

கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது கடவுளுக்கு மட்டுமல்ல கலைக்கும் பொருத்தும் போல…..

சிலம்பக்கலை ஆசிரியரை தொடர்பு கொள்ள :

99 52 24 20 19

செய்தி: எம்.எஸ்.மதுக்குமார்.
படங்கள்: ம.லெஷ்மிபதி

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *