சுண்ணாம்பு. சுரங்கத்தில் வெடி வைக்க எதிர்ப்பு லாரிகள் சிறை பிடிப்பு
அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் அருகே உள்ள வாழைக்குழியில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்பட்டு வருகிறது இதில் சுண்ணாம்புகல் கனிமம் வெட்டி எடுக்க வெடிப்பொருட்கள் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் வீடுகள் சேதமடைவதாக கூறி இன்று சுண்ணாம்புகல் ஏற்றும். லாரிகளை ஊர்மக்கள் சிறைப்பிடித்தனர்
சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறிய கிராம மக்கள் பின்னர் தனியார் ஆலை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் இனி வெடி வைத்து சுண்ணாம்புகல் எடுக்காமல் மாற்று ஏற்பாடு செய்து கொள்வதாக கொடுத்த உறுதியை அடுத்து ஒரு மணி நேரமாக சிறை பிடித்திருந்த லாரிகளை விடுவித்தனர்