சுண்ணாம்பு சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு . மோதலில் முடிந்ததால் முயற்ச்சி தோல்வி.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது புதுப்பாளையம் கிராமம் இதில் பலர் தனது சொத்துக்களை தனியார் சிமெண்ட் கம்பெனிக்கு விற்று விட்டு வெளியேறி விட்டனர். மீதமுள்ள குடியிருப்புவாசிகளை வெளியேற்றும் புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் திறக்க அனுமதி கேட்டு முன்பு மக்கள் கருத்து கணிப்பு கூட்டம் கடந்த 22/9/16 அன்று நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன் உட்பட முப்பது பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை முடித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு வெளிநாடுகளை சேர்ந்த சிலர், மக்கள் சமூக நல சங்கம் என்ற பெயரில் (ராம்கோ) தனியார் சிமெண்ட் காவலர்கள் சக்திசரவணன்(48) ஜெயபால்(49) ஆகியோர் புதுப்பாளையம் கிராமத்திற்க்குள் வந்தபோது புதுபாளையம் கிராம மக்கள் திருவேங்கடம் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு. திருவேங்கடத்தை தனியார் நிறுவன காவலர்கள் தாக்கியுள்ளனர், பொதுமக்கள் இவருக்கு ஆதரவாக வரவேஅடிதடி பெரிதானது. காயம் அடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த திருவேங்கடம் மற்றும் கனகசபை, சீனிவாசன் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டம் நடைபெறுவதாக கூறிய இடத்தை தவிர்த்து பிற இடங்களில் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் செய்வதாக கூறி கையெழுத்து வாங்கும் முயற்ச்சியும், கிராமத்தை காலிசெய்யும் முயற்சியும் இதனால் தோல்வியில் முடிந்தது.