செந்துறையிலிருந்து 40 ம் ஆண்டு பழனி பாதயாத்திரை துவங்கியது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் எழுந்தருளியுள்ள செல்வ சுப்பிரமணியர் ஆலயம் மிகவும் பிரசிப்பெற்றது வேதம்பிள்ளை தலைமையில் முதல்முதலாக கடந்த 1981 ம் ஆண்டு பழனி தைப்பூச தரிசனம் காண பக்தர்கள் மாலையிட்டு விரதமிருந்து பாதயாத்திரை தொடங்கினார்கள்.
பின்னர் முருகன் டெக்ஸ்டைல்ஸ் கணேசன் , உஞ்சினி செல்வராசு தைப்பூசம் ராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆண்டு தோறும் மாலையிட்டு பாதயாத்திரை சென்று வந்தனர். தற்போது குருசாமியாக சுக்கு என்ற சுப்பிரமணி உள்ளார் இவர் தலைமையில் நாற்பதாம் ஆண்டு பாதயாத்திரை காலை வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து இருமுடி கட்டி பழனி பாதயாத்திரை துவங்கியது. எட்டு நாள் நடை பயணம் மேற்கொள்ளும் பத்தர்கள் பஜனை பாடி வழியில் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்து பழனி சென்றடைவார்கள்.