செந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்பாட்டம்



அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் துவங்கிய ஆர்பாட்டத்தில் மாநிலகுழு உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்ட, மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள்,மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்
இதில் செந்துறை தாலுக்காவில் உள்ள கிராமங்களில் நூறுநாள் வேலை அமுல்படுத்த வேண்டும், உளுந்து விவசாயிகளுக்கான பயிர்காப்பீட்டு தொகை, முந்திரி விவசாயகளுக்கான வறட்சி நிவாரணம், சமத்துவபுரத்தில் அங்கன்வாடி மையம்
செந்துறை பேருந்து நிலையம் அருகே கழிப்பிட வசதி, மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி, ஆனந்தவாடியில் மினி டேங்க் ,செந்துறை மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் வலியுருத்தப்பட்டன.