செந்துறையில் தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல்கட்சியினர் மாலையணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளையொட்டி தி.க , திமுக , விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திராவிட கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில்
டாக்டர் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தந்தை பெரியார் சிலையை அடைந்தனர்.
பின்னர் தந்தை பெரியாரின்திருவுருவ சிலைக்கு மாலையணித்துது புகழஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில்
தி மு க தெற்கு ஒன்றிய செயலாளர் பூ செல்வராஜ் , வடக்கு ஒன்றிய செயலாளர் வி. எழில் மாறன் , விடுதலை சிறுத்தை மாநில பொறுப்பாளர் சி கருப்புசாமி , கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் கந்தசாமி, விசிக வடக்கு ஒன்றிய செயலாளர் வீரவளவன் ,ஜெயக்குமார் , குபேந்திரன் செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வே கடம்பன்
திராவிட கழக மண்டல செயலாளர்
சு மணிவண்ணன் ஒன்றிய தலைவர் சங்கர் ஒன்றிய செயலாளர் முத்தமிழ் செல்வன் மாவட்ட இளைஞரணி தலைவர் சு அறிவன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தங்க.சிவமூர்த்தி பி.ஆர் பாண்டியன், ஆதி. இளங்கோவன் , ஆறுமுகம் , வஞ்சினபுரம் முன்னாள் தலைவர்
கா தனபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் ஏராளமனோர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர் பொன்.செந்தில்குமார் செய்திருந்தார்.