செந்துறையில் திருவள்ளுவர் ஞான மன்ற ஆலோசனை கூட்டம் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது
செந்துறையில் திருவள்ளுவர் ஞான மன்ற ஆலோசனை கூட்டம் அருணா பார்வதி மண்டபத்தில் நடைபெற்றது
ஞான மன்ற தலைவர் செல்வராசு தலைமை வகிக்க அமீனா கணேசன் சிவபிரகாசம் மற்றும் இராவணன் முன்னிலை வகித்தனர் மன்ற செயலாளர் தங்கசாமி வரவேற்புரை நிகழ்த்தினார் மன்ற செயல்பாடுகளை மேம்படுத்த. புதிய பொறுப்பாளர்களாக இலக்கிய அணிதலைவராக சந்திர கௌதமன்,செயலாளர் தென்னரசு,பொருளாலர் ராஜ்மோகன் ஆகியோரும் இளைஞரணி தலைவராக விஜயகுமார் செயலாளர் கார்த்திக்,மகளிரணி தலைவராக திருமதி புன்னகை நகர செயலாளராக வேல்முருகன ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்
பின்னர் கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன
மன்ற வரவு செலவுகளை அறிக்கையாக தயாரித்து பாதுகாப்பது செந்துறை நகரில் மின்சார கம்பிகள் பழையவையாகவே உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிபடுவதை போக்க புதிய கம்பிகளா மாற்றி மின்சாரத்தை சீர் செய்ய வேண்டும், மாவட்டகல்வி அலுவலகம் தொடர்ந்து செந்துறையில் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன
இறுதியாக மன்ற பொருளாலர் கரிகாலன் நன்றி கூறினார்