செந்துறையில் புதிய கல்வி மாவட்ட அலுவலகம் திறப்பு மற்றும் அலுவலர் பதவியேற்பு
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரண்டு கல்வி மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது அரியலூர் மாவட்டத்தில் கல்வி திறனை மேம்படுத்த மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றார் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை செயல்பட்டு வந்தது தற்போது செந்துறை ஆண்டிமடம் பகுதியை பிரித்து புதியதாக மூன்றாவதாக செந்துறை கல்வி மாவட்டம் செயல்பட புதிய அரசாணை வெளியிடப்பட்டது.
இதனையடுத்து செந்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தை மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தநாராயணன் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார் .
அரியலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த ஆனந்தநாராயணன் மாவட்ட கல்வி அலுவலராக புதியதாக பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி செந்துறை கல்வி மாவட்டமானதை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர் மாவட்ட கல்வி அலுவல கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், வட்டார கல்வி அலுவலர்கள் மருதைராஜா, ராசாத்தி, கருணாநிதி, விஜயலட்சுமி, இளங்கோவன், சாந்திராணி, ரவிச்சந்திரன், வட்டார மேற்பார்வையாளர் குணசேகரன், தலைமை ஆசிரியர் இராமலிங்கம், பாலசுப்பிரமணியன், புகழேந்தி மற்றும் செந்துறை பள்ளி ஆசிரியர்கள் தேவேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, பிரேம் ஆகியோர் கலந்துகொண்டனர்.