செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் துவங்கியது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார வள மையம் சார்பாக பள்ளி கல்வி துறை வழிகாட்டுதல் படி மாணவ மாணவியரின் திறன் மேம்பாட்டுற்கான கலைத்திருவிழா வட்டார அளவிலான போட்டிகள் இன்று நவம்பர் 29 ந்தேதி துவங்கியது.
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.செல்வவிநாயகம் தலைமையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை மணிமேகலை முன்னிலையில் துவங்கிய கலைப்போட்டி திருவிழாவில் பங்கேற்க வந்த மாணவ மாணவிகளுக்கு நல்லாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வெற்றிசெல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் ரவிசந்திரன் , உமையாள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆ.அன்பரசன் , பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ம.கீதா உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பயிற்றுனர்கள் முருகேசன் , சுப்பிரமணி , உஷா மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ஆர்த்தி மற்றும் வட்டார அளவிலான இருபால் ஆசிரியர்கள் மற்றும் கல்விதுறையை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.