செந்துறை அரசு மருத்துவமனை முழு நேரம் செயல்பட தெருமுனை கூட்டம்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை. போதிய ஆட்கள் இன்றி பொதுமக்கள் பாதிப்பு அடைவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுகமிட்டி சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் 20.11.17 திங்கள் இரவு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாநில ,மாவட்ட பொறுப்பாளர்கள் செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள்,நர்ஸ்கள்,தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றக்குறையால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி தனியார் மருத்துவர்களை நாடுவதாக கூறியதோடு
அரசு பணத்தில் வாங்கிய மருத்துவகருவிகளும் வீணாவதாக பேசினார்கள்.இதுபோல ஏலாக்குறிச்சிக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவும் கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
2 comments
Pingback: buy boring carts
Pingback: Fysio Dinxperlo