செந்துறை அரசு வளாகத்தில் அபாரமாய் வளரும் பார்தீனியம்
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள வேளாண்அலுவலகம், மருத்துவமனை வளாகம் மற்றும் காவல்நிலைய குடியிருப்பு பகுதிகளில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பார்தீனிய செடி எனப்படும் மூக்குத்தி செடி அபாரமாக வளர்ந்து வருகிறது.
அதற்க்கு என்ன? என்று தானே நினைக்கிறீர்கள் இரண்டாம் உலக போரின்போது ஏற்பட்ட பஞ்சத்தை காரணம் காட்டி அமெரிக்காவில் இருந்து வந்த கோதுமைகளோடு இந்த விஷவிதைகளும் இந்தியாவில் நுழைந்தது.
எந்த தட்பவெப்பத்திலும் வளரக்கூடிய இந்த விஷசெடி மனிதர்களுக்கு அரிப்பு,தோல்நோய்,ஆஸ்துமா,நுரையிரல்பிரச்சனை,மற்றும் மூச்சு திணறலை உண்டாக்க கூடியது. காற்றில் பரவும் தன்மையுடைய இதன் விதைகள் ஒரு செடிக்கு ஒருலட்சம் இருக்கும் என்பதை நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டுகொண்ட ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து விழிப்புணர்வு உண்டாக்கதொடங்கினர்.
மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதா 2011 -2012 நிதியாண்டில் பார்தீனிய செடிகளால் மக்களுக்கு ஏற்படும் தீமைகளை போக்கும் விதமாக வேளாண்துறையின் மூலம் பார்தீனியசெடி ஒழிப்பு இயக்கம் என தொடங்கி செடிகளை அழிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.
வேளாண்துறையோடு பல சமூக அமைப்புகள், பள்ளி மாணவர்கள், தன்னார்வதொண்டு நிறுவனங்கள் என பார்தீனிய செடிக்கு எதிராக களம் இறங்கின.
தற்போது யாரும் கண்டுகொள்ளாததால் பார்தீனியம் வேகமாய் பரவிவருகிறது. குறைந்தபட்சம் அரசு வளாகங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டால் மக்கள் தானாக இந்த செடியின் தீமை உணர்ந்து அழிப்பார்கள் என்பதும். நோய் பரப்பும் எந்த ஒரு செயலையும் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
மனிதர்கள்,கால்நடைகள் என மெல்ல கொல்லும் பார்தீனியம் இல்லாத அரசு வளாகம் அமையுமா ?