செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் விடபட்டது.
செந்துறை அருகேயுள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவில் திருத்தேர் கடந்த 29/5/17 அன்று நடந்த தேரோட்டத்தின் போது அச்சு முறிந்து சாய்ந்தது
இது ஊர் மக்கள் மற்றும் ஆன்மிகவாதிகளுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியதையடுத்து.
தேர் புதுபிக்கும் பணி தொடங்கியது திருச்சி பாரத்மிகு மின் நிறுவனம் மூலம் சுமார் முவாயிரத்து ஜந்நூறு கிலோ எடைக்கொண்ட இரும்பு சக்கரங்களும் அச்சும் தயாரிக்கப்பட்டு பொருத்தபட்டன.
இத்தேரின் வெள்ளோட்டம் இன்று காலை மாரியம்மன் கோவில் முன்பு தொடங்கியது கந்தசாமி வாத்தியார், அமிர்தலிங்கம்,கணேசன் ஆகியோர் அம்பாளுக்கும் தேருக்கும் படையலிட்டனர் பின்னர் நாட்டாண்மைகள் தங்கராசு, பாண்டியன்,மருதமலை,தமிழரசன்,காமராசு,மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் வடம்பிடிக்க ஊர்பொதுமக்கள் ஓம்சக்தி பாராசக்தி என பக்தி முழக்கமிட்டபடியே ராஜ வீதிகளில் தேரை இழுத்தனர். பதினோருமணியளவில் தேர் நிலை வந்தடைந்ததும் பக்தர்கள் ஆனந்த கூச்சலிட்டனர்.