செந்துறை அருகே குடிநீா் கேட்டு பொது மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்
அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே முதுகுளம் கிராமத்தில் உள்ள காலணி தெருவில் கடந்த 20 நாட்களாக குடிநீா் வராதததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
6 மாதங்களுக்கு முன்பு இதே நிலை இருந்ததால் புதிதாக போர்வெல் போடப்பட்டது அதிலும் கடந்த 20 நாட்களுக்கு குடிநீா் வரவில்லை என்றால் என்ன அர்த்தம் என சாலை மறியலில் ஈடுபட்டனா். தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
இதனால் செந்துறை – பென்னாடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தகவல் அறிந்த வட்டாச்சியா் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.