செந்துறை இருட்டில் கிடக்கும் பேருந்து நிறுத்தம் பயணிகள் அச்சம்.
செந்துறை உடையார்பாளையம் பிரதான சாலையில் ளந்தல் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள வாள்பட்டறை பேருந்து நிறுத்த எதிரே அமைந்துள்ள மின்கம்பத்தில் கடந்த ஒருமாதமாக மின் விளக்கு எரியாததால் பெண் பயணிகள் இரவு நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தின்அருகே ஒருவித அச்சத்துடனே அமர்ந்துள்ளனர்.
திரௌபதையம்மன் கோவில்தெரு, இராமசாமி நகர் சந்திப்பு என வீதிகளும் பெட்ரோல்பங்க், மதுபானகடை என பரபரப்பாக உள்ள இந்த சாலையின் பேருந்து நிறுத்தம் இருட்டில் கிடப்பதால் வாகன ஓட்டிகள் வரும்போது வயதானவர்கள் இந்த சாலையை கடக்க சிரம படுகிறார்கள் செந்துறை சிறப்பு பஞ்சாயத்து அதிகாரிகள் கவனம் கொள்வார்களா?