செந்துறை உஞ்சினி மாரியம்மன், திரௌபதியம்மன், சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராம பொதுமக்களால் புதிதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவில், சுப்ரமணியர், திரௌபதியம்மன், உள்ளிட்ட காமட்டி கோவில்களின் கும்பாபிஷேகம் இராகவன் அய்யங்கார் தலைமையில் கோபூஜை, கணபதி ஹோமம் யாகசாலை நிகழ்ச்சி நடைபெற்று
த்வாரபூஜையுடன் யாகம் தொடங்கி திருக்குடம் எனப்படும் கடம் புறப்பட்டு பத்துமணியளவில் சுப்ரமணியர், திரௌபதியம்மன், மாரியம்மன், காமட்டி ஆகிய கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷே நீர் ஊற்றப்பட்டது .பின்னர், மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.
இவ்விழாவில் சிறுகடம்பூர், நல்லாம்பாளையம், கீழராயம்புரம், செதலாவாடி, செந்துறை பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். விழா ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்