mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை எப்போதும் கைவிடாது குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. ஆர் பெருமிதம்.

செந்துறை எப்போதும் கைவிடாது குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. ஆர் பெருமிதம்.

செந்துறை எப்போதும் கைவிடாது குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. ஆர் பெருமிதம்.

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை ஒன்றிய அ தி மு க செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி. இராமசந்திரன் பேசியது :

என் தாய்வீடு போலவே இந்த செந்துறை ஒன்றியத்தை உணர்கிறேன். இரண்டு முறை நடந்த தேர்தலில் இரட்டைஇலை தான் இந்த ஒன்றியத்தில் அதிக வாக்குகளை பெற்றது. கடந்த இருபது ஆண்டுகளாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லாத நிலையில் நான் உங்களை நாடி உரிமையோடு வந்தேன். என்னை குடும்பத்தில் ஒருவனாக ஏற்று வெற்றிக்கு பாடுபட்டீர்கள். அந்த நன்றியை நான் என்றும் மறக்கமாட்டேன் வரும் தேர்தலில் இரட்டை இலை குன்னம் சட்டமன்றத்தில் வெற்றிபெறும் அதை செந்துறை ஒன்றியம் ஈட்டித்தரும். என்னை எப்போதும் இந்த மக்கள் கைவிடமாட்டார்கள் இதை எப்போதும் எங்கேயும் சொல்வேன் என கூறினார்.

முன்னதாக அதிமுக அலுவலகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார் பின்பு கடைவீதியில் உள்ள எம் ஜி ஆர் சிலைக்கும் மாலை அணிவித்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய , கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு.

வீர மங்கைகளுக்கு தமிழ் பேரரசு கட்சி பொதுசெயலாளர் நேரில் பாராட்டு. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், ஆதனூர் அருகேயுள்ள கொட்டரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *