செந்துறை. காங்கிரஸ் துவக்கநாள் கொடியேற்றம்
காங்கிரஸ் கட்சி தொடங்கி 133 ஆம் ஆண்டு தினம் இன்று செந்துறை நகரில் கொண்டாடபட்டது
இதையொட்டி செந்துறை பேருந்து நிலையம் அருகே உள்ள கொடி கம்பத்தில் வட்டார தலைவர் (வடக்கு) செந்தில் தலைமையில் காங்கிரஸ் கட்சி கொடியை மாவட்ட பொது செயலாளர் சந்திரசேகர் ஏற்றி வைத்தார்.
பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டன இந்நிகழ்ச்சியில் கணேசன்,, கண்ணன், இராதாகிருஷ்ணன்,காமராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் அனைவருக்கும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.