செந்துறை காவல்நிலையம் முன்பு பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை காவல்நிலையம் முன்பு இன்று டிசம்பர் 3 ந்தேதி பாஜக கட்சியினர் திருச்சி மாவட்ட தலைவர் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தெற்கு ஒன்றிய தலைவர் எஸ் .கே. புயல் செல்வம் , மற்றும் செந்துறை வடக்கு ஒன்றிய தலைவர். என்.ஆர்.இரவி ஆகியோர் தலைமையில் தெற்கு ஒன்றிய பொதுசெயலாளர். வி.பழனிசாமி வடக்கு ஒன்றிய பொதுசெயலாளர். நீதி செல்வம். இளையராஜா..மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் இராஜா , முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழக காவல்துறையை கண்டித்து போடாதே போடாதே , பொய் வழக்கு போடாதே , திருச்சி மாவட்ட தலைவரை கைது செய்ததை கண்டிக்கிறோம் , தமிழக அரசு காவல்துறையை கண்டிக்கிறோம் என கோஷமிட்ட படி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் (பொ) சித்ரா தலைமையில் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பாஜகவினரை கைது செய்தனர் இந்த சாலை மறியலில் சுமார்அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.