செந்துறை கீரின்சிட்டிலயன் சங்கம் மற்றும் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை நடத்திய சிறப்பு இதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இன்று செந்துறை கீரின்சிட்டிலயன் சங்கம் மற்றும் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு இதய பரிசோசனை முகாம் சோம .மங்களம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை லயன் சங்க தலைவர் சேட்டு துவக்கி வைத்தார்.
செட்டிநாடு ஸ்பெசாலிட்டி மருத்துவர்கள் டாக்டர்ஆனந்த்(இதயநோய் சிறப்பு மருத்துவர்) டாக்டர் ராஜா (பொது மருத்துவர்)உள்ளிட்ட பரிசோதனை குழுவினர் வந்திருந்த பொது மக்களை பரிசோதித்தனர். இதில் எழுபத்திஜந்து பேருக்கு இ.சி.ஜி யும் ஜம்பது பேருக்கு எக்கோ பரிசோதனையும் மேற்கொள்ளபட்டதில் பத்து நபர்கள் இதய அறுவைசிகிச்சை, மற்றும் மேல் சிகிச்சைக்காக சென்னை வருமாறும் மீதம் உள்ளவர்களின் உடல்நிலைக்கேற்ப மருந்து மாத்திரைகளும் பரிந்துரை செய்யபட்டது.
முகாம் ஏற்பாட்டினை செந்துறை கீரின்சிட்டி லயன்சங்க உறுப்பினர்கள் செய்திருந்ததோடு அனைவரும் கலந்துகொண்டனர்