செந்துறை திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று கொடியேற்றம் நடைபெற்றது.







செந்துறை நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதையம்மன் ஆலயம் மிக பழமையானது இதன் திருவிழா தொடக்கமான
கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக ஊர்நாட்டாமைகள் கிராம பொதுமக்கள் சேர்ந்து மனோகர்பத்தர் வீட்டிலிருந்து சீர்எடுத்து வந்தனர் பின்னர் அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பந்தல்கால் ஊன்றபட்டது
பின்னர் பக்தர்கள் புடைசூழ கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்தோடு சஞ்சீவிமலை சுமந்த ஆஞ்சனேய ஜெயக்கொடி ஏற்றபட்டது. இது குறித்து கோவில் பூசாரி தாமரை கூறியது.
அம்மாள் மிகவும் சக்தி வாய்ந்தவள் கேட்ட வரம் அருள கூடியவள் இன்றுமுதல் விரத காலம் துவங்குகிறது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் மகாபாரதம் பதினெட்டு நாட்கள் பாடப்பட்டு திருவிழா நாளான பதினெட்டாம் நாள் தீமிதி நடைபெறும் என தெரிவித்தார்