செந்துறை நியாய விலை கடைகளில் தொடர்ந்து ரேஷன்களில் குண்டு அரிசி வழங்குவதை மாற்ற ஊராட்சி தலைவர் கோரிக்கை.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் செயல்படும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து குண்டு அரிசி வழங்குவதால் அட்டைதாரர்கள் சிரமத்திற்க்குள்ளாவதாக செந்துறை முதல் நிலை ஊராட்சி தலைவர் செல்லம் கடம்பன் இன்று டிசம்பர் 1 ந்தேதி வட்ட வழங்கல் அலுவலருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
கோரிக்கை கடிதத்தில் செந்துறை நகரில் செயல்படும் நியாய விலை கடைகள் ஒன்று மற்றும் இரண்டில் தொடர்ந்து பல மாதங்களாக குண்டு ரக அரிசியே வழங்குவதால் ரேஷன் அரிசியை உணவுக்காக பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதாகவும் இதை கவனத்தில் கொண்டு நியாய விலை கடை ஒன்று மற்றும் இரண்டில் குண்டு ரக அரிசியை மாற்றி சன்ன ரக அரிசி வழங்க ஏற்பாடு செய்யுமாறு முதல் நிலை ஊராட்சி தலைவர் செல்லம் கடம்பன் கூறியுள்ளார்.