செந்துறை நீண்டகால சுண்ணாம்பு கல் சுரங்களை மூட மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியரிடம் மனு
செந்துறை தாலுக்கா மணப்பத்தூர் பஞ்சாயத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் கலந்துகொண்ட மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
இதில் ஆதனகுறிச்சி புதுபாளையம் மக்கள் சார்பாக சமூக ஆர்வலர் நீலமேகம் என்பவர் மனு அளித்தார் அந்த மனுவில்
செந்துறை வடக்கு பகுதியில் இயங்கிவரும்ராம்கோ மற்றும் இந்தியா சிமெண்ட் ஆலைகளின் பழைய சுண்ணாம்புகல் சுரங்கங்களை ஆய்வு செய்து மூடவேண்டும் என்றும் வருகின்ற 24-03-2018 அன்று புதுபாளையம் புதிய சுரங்கத்திற்காக நடக்க இருக்கும் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் புதிய சுரங்கம் வெட்ட அனுமதி வழங்க கூடாது ஏன் எனில் மக்கள் சுவாசகோளாறு குடிநீர்மாசு விவசாயம் அற்ற நிலை என அவதி படுகிறார்கள்
இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் கருணையோடு பரிசீலிக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள் அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்திலும் மனு அளிக்கபட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது