செந்துறை பள்ளி மாணவர்கள் சுற்றுசூழல் பேரணி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணக்குடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தேசிய பசுமைப் படை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை தலைமையாசிரியர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். கிராமக் கல்வி குழு தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி மாணவர்கள் பிளாஸ்டிக் தவிர்ப்போம்,இயற்கை மண் வளத்தை காப்போம்,ஓசோன் படலத்தை பாதுகாப்போம்,மரங்கள் வளர்ப்போம்,மழைநீரை சேமிப்போம்,பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்போம் என கோஷமிட்டு
முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் பசுமை படை பொறுப்பாசிரியர் இராஜமோகன் நன்றி கூறினார்.