செந்துறை பா.ம.க கிழக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் செந்துறை கிழக்கு ஒன்றிய பொதுகுழு கூட்டம் அசாவீரன்குடிக்காட்டில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மு.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற பொதுகுழு கூட்டத்திற்க்கு வந்திருந்த அனைவரையும் ஒன்றிய செயலாளர் சுந்தர. ராஜதுரை வரவேற்றார். குன்னம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இரா.மொழியரசன் முன்னிலை வகிக்க
மாவட்ட, ஒன்றி துணை செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்தாலோசித்தனர். பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன
வரும் நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி கிராம் தோறும் ஏற்றுவது
கட்சி உறுப்பினராக புதியவர்களை அதிகபடியாக இணைப்பது
வரும். 27 ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட பொதுக்குழுவை சிறப்பாக நடத்த பாடுபடுவது
கூட்டுறவு சங்க தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற பணியாற்றுவது
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.