செந்துறை பிரதோஷ காலத்தில் வானம் போட்ட வர்ணஜாலம் தேவர்கள் கூடியதாக பக்தர்கள் சிலிர்ப்பு
செந்துறை பிரஹன்னநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வர்ர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
கோமாதா பூஜை செய்த உமாபதி குருக்கள் பின்னர் மூலருக்கும் ,நந்தியம்பெருமானுக்கும் திரவியம், பால்,தயிர்,தேன் , பஞ்சாமிர்தம் இளநீர், சந்தனம் விபூதி, உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டினார்
பின்னர் அலங்கரிக்க பட்ட ரிஷப வாகனத்தில் அம்பாளும்,சுவாமியும் பக்தர்கள் தேவார, திருவாசக பன்னோடு பிரகார சுற்று வந்தனர். அப்போது வானில் வர்ணஜாலமாக மேகங்கள் கூட்டம் கூட்டமாக அசையாது நிற்பதை கண்ட பக்தர்கள் முப்பத்திமுக்கோடி தேவர்களும் இந்த பிரதோஷகால வழிப்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறி மெய்சிலிர்த்தனர்.




