செந்துறை பிரம்மபூதிவலம், ஆருத்ரா தரிசனம் என களைகட்டிய சிவ ஆலயம்
- செந்துறை நகரில் உள்ள பிரஹன்னநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி நாளன்று சித்தர் தாண்டவபிரியர் ஜீவசாமதியில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்று பிரம்மபூதி வலம் தொடங்கியது இந்நிகழ்சியை வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் தொடக்கிவைத்தார்
இதை தொடர்ந்து சிவபெருமான் ஆதிரை நாளுக்கு உரியவன் ‘ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் ஊர்திரை மேலி உலகு’ புராணங்கள் ஒதும் சிவபெருமானின் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக வீதியுலா வந்த சிவபெருமான் அம்மையோடு கோபமுற்று ஊடல் கொள்ளசமய குரவர்களில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அம்மையப்பனுக்கு தூது சென்று சமாதானம் செய்யும் காட்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திருஞானசம்பந்தர் அறக்கட்டளையினர் உள்ளிட்ட செந்துறை சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இரண்டு நாட்களும் தொடர்விஷேங்களால் சிவ ஆலயம் களைகட்டியிருந்தது.
இதே போல் குழூமூர்கிராமத்தில் உள்ள கோவர்த்தனாம்பிகை உடனுறை ஜெயபுரீஸ்வரர்
மேள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து எழுந்தருளி செல்லியம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, முக்கிய வீதிகளில் ஜெயபுரீஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்