செந்துறை பிரம்மபூதி பௌர்ணமி வழிபாடு துவங்கியது.
திருவடிகுடில் சுவாமிகள் துவக்கிவைத்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை நகரின் மையப் பகுதியில் வீற்றிருக்கும் பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி அன்று 03.11.17 வெள்ளியன்று மாலை 5.30 மணியளவில் தாண்டவப்பிரிய சித்தர் ஜீவசாமாதியில் வழிபாடு நடைபெற்று. திருவடிக்குடில் சுவாமிகள் ( கும்பகோணம்) தலைமையில் பௌர்ணமி வீதியுலா துவங்கியது
தாண்டவபிரியன்சித்தர் ஜீவசமாதியில் புறப்பட்டு வீதிகளின் வழியே சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த பக்தர்கள் ஒன்பது முறை பிரகார சுற்று சுற்றியபடியே தேவார திருவாசம் பாடியபடியே சுவாமியையும்,அம்பாளையும் வழிபட்டனர். இன்று ஜப்பசிபௌர்ணமி என்பதால் சிறப்பு அபிஷேகத்தோடு, அன்னாபிஷேகமும் நடைப்பெற்றது. முன்னதாக கூட்டுபிராத்தனை நூலை திருவடிகுடில் சுவாமிகள் வெளியிட அதை பத்தர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து திருஞானசம்பந்தர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ரத்தினசபாபதி தெரிவித்தாவது .
பிரம்மபூதி சந்தி வெளிச்சம் எனப்படும் மாலை 5.21 முதல் 6.00 வரையுள்ள முப்பத்தியொன்பது நிமிடங்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சிவபுராணம், கோளறுபதிகம் பாடினால் செல்வம், புகழ், குழந்தை பேறு உள்ளிட்ட பதினாறு செல்வங்களும் கை கூடும் எனவே மாதந்தோறும் வரும் பௌர்ணமியன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் தவறாது கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம். என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஜந்நூறுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
செந்துறை சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு சூரியன் சந்திரனோடு ராகு, கேது கூடுவதால் உண்டாகும் தோஷம் தளம் சூரியன் மறையும் சந்தியா காலத்தில் பசுநெய் தீபமேற்றி மலர் வைத்து வழிபட்டால் உடல் ஆரோக்கியம் மோட்சம் அருள்கின்ற தளம், ஜென்ம நட்சத்திரத்தில் இந்த தலத்தில் நவகிரக யாகம் செய்தால் அனைத்து நன்மைகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார் என்பது இக்கோவிலின் சிறப்பாக உள்ளது.
One comment
Pingback: คาสิโน ออนไลน์ vs คาสิโนจริง