mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / செந்துறை பொதுமருத்துவமனையில் மருத்துவர்கள் வேண்டும் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்

செந்துறை பொதுமருத்துவமனையில் மருத்துவர்கள் வேண்டும் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்

செந்துறை அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை நியமிக்க கொட்டும் மழையில்
அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம்
செந்துறையில் இயங்கிவரும் அரசு பொது மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள் இல்லாத்தால் மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகள் அவஸ்தைக்கு உள்ளாவதால் போதிய மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், குமிழியம் 24 மணிநேர மருத்துவ மனை மற்றும் இரும்புலிகுறிச்சி, பொன்பரப்பி, குழுமூர், மணக்குடையான், அங்கனூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் அதிகம் தேவை என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராசு, காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் செந்தில், பன்னீர், விசிக மாவட்ட செயலாளர் செல்வநம்பி, திக மண்டலத் தலைவர் மணிவண்ணன், திக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் ஆர்பாட்டம் நடைபெற்றது குறிபிடத்தக்கது.

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *