செந்துறை போனில் பேசி பணம் திருடும் கும்பல் பொதுமக்கள் உஷார்.
செந்துறை அருகே உள்ள நமங்குணம் கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் பழனிமுத்து(55) விவசாய கூலி தொழிலாளி இவரது மகன்கள் வேலு, இந்திரபால் என இரு மகன்கள் சென்னையில் படித்து வருகின்றனர். செந்துறையில் இயங்கும் அரசு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
பழனிமுத்து கடந்த 4 ம் தேதி மதியம் தனது மகன் படிப்பு செலவிற்க்காக ரூபாய் ஏழாயிரம் எடுத்தது போக மீதம் 28 ஆயிரம் வங்கியில் இருப்பு இருந்துள்ளது.
5 ம் தேதி காலை பழனிமுத்துவின் செல்லுக்கு போன் செய்த மர்ம நபர் பேங்கில் இருந்து பேசுவதாகவும் உங்கள் வங்கி கணக்கு முடக்கபட உள்ளதால் கணக்கு எண் கொடுக்க வேண்டும் என ஆபிசர் தோரணையில் பேச
பழனிமுத்து மகள் கலையரசி வங்கி கணக்கு எண்ணை கூறிய உடன் போன் துண்டிக்க பட்டு சிறிது நேரத்தில் பழனிமுத்து வங்கி கணக்கிலிருந்து ரூபாய் இருபதாயிரம் பணம் எடுத்ததாக செல்போனுக்கு தகவல் வந்ததை கண்டு பதறியடித்துசெந்துறை வங்கியில் வந்து முறையிட அவர்கள் ஆலோசனையின் பேரில்
பழனிமுத்து வயித்தை வாயை கட்டி சேர்த்த பணம் பறிபோனதை நினைத்து கலங்கியபடியே செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போல் 15 நாட்களுக்கு முன்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடமும் ஒரு லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் திருடபட்டதும், நாற்பது நாளுக்கு முன்பு கறிகடை நடத்தும் பாயிடம் இதே பாணியில் ஜம்பதாயிரம் களவாட பட்டதும் , பென்ஷன் தாரர் ஒருவரின் கணக்கில் இருபத்தி மூன்றாயிரமும் திருடபட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
காவல்துறையும், வங்கியினரும் இதுபோன்ற போன்கால்கள் வந்தால் எந்த தகவலும் அளிக்காமல் சம்பந்த பட்ட வங்கி அதிகாரிகளை நேரடியாக அணுகி தகவல் கேட்டது யார்? என சரிபார்க்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.