செந்துறை மக்கள் திலகம் நினைவு நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் செந்துறை எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பேரணியாக சென்று உடையார்பாளையம் பிரிவு சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செல்வம், கூட்டுறவு வங்கி தலைவர் கொளஞ்சிநாதன், முன்னால் ஒன்றிய செயலாளர் ஜமால்முகமது, ரமேஷ், கலியமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்