செந்துறை
கூட்டுறவு அங்காடியில் குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசு எம்.பி ,எம்.எல்.ஏ பங்கேற்பு
செந்துறை கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்.
செந்துறை தாலுக்காவில் 90 சதவீதம் உள்ள 29, 269 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, கூட்டுறவு சங்கத்தலைவர் கொளஞ்சிநாதன், கூட்டுறவு வங்கி செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் சுரேஷ், அவைத்தலைவர் செல்வம், கூட்டுறவு அங்காடி விற்பனையாளர் பாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
3 comments
Pingback: lyrica viihdekäyttö
Pingback: Charter guns
Pingback: 토렌트 사이트