செந்துறை வார சந்தையில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 8 ஆம் தேதி முதல் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
செயலாளர் சரவணன் தலைமையில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜூன் 8ஆம் தேதி முதல் நடைபெறும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சங்கத்தினர் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
சம வேலைக்கு சம ஊதியம், சட்டப்படியான 8 மணிநேர வேலை ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தணி அறை வசதி உயர் வாழ தேவையான உணவு உண்பதற்கு கால அவகாசம் என்பன போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது, செந்துறை வாரசந்தையில் பொதுமக்களை சந்தித்து தங்களது போராட்டம் குறித்து விளக்கம் அளித்து ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள் .
