சென்னிவனத்தில் முதலாவது முற்றோதல் துவக்கம். பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு
அரியலூர்மாவட்டம் சென்னிவனம் கிராமத்தில் அமைந்துள்ளஅருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை தீர்க்கபுரிஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையானது. இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவில் குடமுழுக்கு நடைபெறவேண்டி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி 12.11 17 ஞாயிறு அன்றுகாலை நடைபெற உள்ளது.
ஞாயிறு காலை 4.30 கணபதி ஹோமத்துடன் துவங்கும் நிகழ்ச்சியில் நடராசர் அபிஷேம், விடைகொடி ஏற்றுதல், கோபூஜையுடன் ஆத்மார்த்தமூர்த்தி வழிபாடும் முற்றோதல் நிகழ்ச்சியும். மதியம் மகேஸ்வரபூஜை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரமக்கள் பெருந்திரளாகலந்துக்கொள்ள வேண்டுமென விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்