சென்னிவனம் சிவ ஆலயத்தில் சனி மாக பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கிராமத்தில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை தீர்க்கபுரீஸ்வரர் ஆலயம் பழமையானதும் நோய்தீர்க்க வல்லதுமாகும் இக்கோவிலின் புராட்டாசி சனிமாகபிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது சுப்பிரமணிய சிவாச்சாரியார் மூலவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு திரவியபொடி பால் தயிர் சந்தானம் பழம் மற்றும் இதர அபிஷேகபொருட்களால்அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சனை செய்தார் பின்னர் ரிஷப வாகனத்தில் அம்பாளும் எம்பெருமானும் ஹர ஹரா சிவ சிவா என்ற மந்திரம் முழங்க பிரகாரம் சுற்றிவந்தனர் புரட்டாசி சனி மகா பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் உள்ளது என்பதால் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது வழிபாட்டு ஏற்பாட்டினை சிவனடியார்கள் பொதுமக்கள் மற்றும் பேராசிரியர் இராமலிங்கம் குடும்பத்தினர் செய்திருந்தனர்