சைக்கோ கொலையாளி தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் தஷ்வந்தை அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகத்தில்கூடிய மாதர்சங்கத்தினர் அவனை சரமாரியாக தாக்கினார்கள்.
சென்னை மாங்காட்டை சேர்ந்தசிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தல் செய்து எரித்துகொலை செய்த வழக்கில் கைதான தஷ்வந்த் ஜாமீனில் இருந்த போது தனது தாயையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பி சென்றான் தனிப்படை போலீஸ் அவனைகைது செய்து சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.
ஹாசினி கொலை வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஷ்வந்தை அழைத்து வந்த போது அங்கு திரண்டிருந்த மாதர் சங்கததினர் போலீஸ் பாதுகாப்பை மீறி தஷ்வந்தை செருப்பால்அடித்து தாக்கினார்கள்.போலீசார்அவர்களை தடுத்து நீதிபதி முன்புஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 18 ம் தேதி மீண்டும் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.இதனையடுத்து வெளியே வந்த தஷ்வந்த் தனக்கும் தனது தாயின்கொலைக்கும் எந்த சம்மந்தமும்இல்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான் நீதிபதி முன்பு தனக்கு பாதுகாப்பு இல்லாததால் விரைந்து தண்டனைஅறிவிக்கும் படி கூறி கதறிஅழுதான்.
ஏற்கனவே சிறுமிஹாசினி வழக்கில் தஷ்வந்க்காக ஆஜரான வழக்கறிஞர்
விஜயகுமார் விலகியதால் சட்ட ஆலோசனைமையம் மூலம் வழக்கறிஞர் ராஜ்குமாரை அரசு நியமித்துள்ளது.மாதர் சங்க தாக்குதலால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.