சோழன்குடிகாடு கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை தரவில்லை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உழைக்கும் மக்கள் போராட்டகமிட்டி சார்பில் புகார் மனு.
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய குறை தீர்ப்பு கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியின் சார்பில் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் மனு ஒன்றை அளித்தார் அதில்
செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மணப்பத்தூர் பஞ்சாயத்து சோழன்குடிக்காடு கிராமத்தில் உள்ள மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகள் 600 (வார்டு 1 மற்றும்2 ) நபர்களுக்கு 2017 /18 ம் ஆண்டுக்கான நூறுநாள் வேலை உறுதியில் இதுவரை பத்துநாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதம் உள்ள 90 நாட்கள் பணி இதுவரை வழங்கபடவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது நிதி ஆதாரம் ஏதுமில்லை என கூறியதாகவும் அப்படி நிதி இல்லாபட்சத்தில் பக்கத்து கிராம பஞ்சாயத்துக்களில் மட்டும் நூறுநாள் வேலை திட்டம் அமுல்படுத்த படுவது எப்படி என்ற கேள்வியும் எழுப்பட்டுள்ளதோடு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து சோழன்குடிகாடு மக்களுக்கு மிதமுள்ள. 90 நாள் வேலையை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் வேலை கிடைக்காதபட்சத்தில் போராட்டம் நடத்தபடும் என்றும் அம்மனுவில் குறிப்பிடபட்டுள்ளது..